Gandhigram’s HEALTHY CHOICESIyarkai Angadi, Sakthi center point, Thally road, Hosur. @ +91-8667070682 |
மூலிகை பொடிகளின் பயன்கள்
- அருகம்புல் பொடி – அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி. இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.
- நெல்லிக்காய் பொடி – பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது.
- கடுக்காய் பொடி – குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
- வில்வம் பொடி – அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது.
- அமுக்கலா பொடி – தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
- சிறுகுறிஞான் பொடி – சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
- நாவல் பொடி – சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
- வல்லாரை பொடி – நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
- தூதுவளை பொடி – நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
- துளசி பொடி – மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
- ஆவரம்பூ பொடி – இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
- கண்டங்கத்திரி பொடி – மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.
- ரோஜாபூ பொடி – இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.
- ஓரிதழ் தாமரை பொடி – ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும். வெள்ளைபடுதல் நீங்கும்.
- ஜாதிக்காய் பொடி – நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.
- வெந்தய பொடி – வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
- நிலவாகை பொடி – மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.
- கறிவேப்பிலை பொடி – கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.
- வேப்பிலை பொடி – குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
- திரிபலா பொடி – வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.
- அதிமதுரம் பொடி – தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.
- துத்தி இலை பொடி – உடல் உஷ்ணம், உள்-வெளி மூல நோய்க்கு சிறந்த்து.
- செம்பருத்திபூ பொடி – அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.
- கரிசலாங்கண்ணி பொடி – காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.
- சிறியாநங்கை பொடி – அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.
- கீழாநெல்லி பொடி – மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.
- முடக்கத்தான் பொடி – மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.
- குப்பைமேனி பொடி – சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.
- பொன்னாங்கண்ணி பொடி – உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.
- முருங்கைவிதை பொடி – ஆண்மை சக்தி கூடும்.
- சித்தரத்தை பொடி – சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.
- பொடுதலை பொடி – பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.
- சுக்கு பொடி – ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.
- ஆடாதொடை பொடி – சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.
- கருஞ்சீரகப்பொடி – சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.
- நெருஞ்சில் பொடி – சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.
- வசம்பு பொடி – பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.
- சோற்று கற்றாலை பொடி – உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.
- கருவேலம்பட்டை பொடி – பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்
- நீர்முள்ளி பொடி – தாய்ப்பால், குருதி தூய்மை, வயீற்றுப்போக்கு, உடல் எடை குறைய.
- திப்பிலி பொடி – உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.
- நாயுருவி பொடி – உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.
- வெட்டி வேர் பொடி – நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.
- வெள்ளருக்கு பொடி – இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.
- நன்னாரி பொடி – உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.
- லவங்கபட்டை பொடி – கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.
- வாதநாராயணன் பொடி – பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.
- பாகற்காய் பவுடர் – குடல்வால் புழுக்களை அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
- வாழைத்தண்டு பொடி – சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.
- மணத்தக்காளி பொடி – குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.
- கோரைகிழங்கு பொடி – தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
- தும்பை இலை பொடி – சளி, தலைபாரம், விஷ கடி, கப நொய்களுக்கு சிறந்தது.
- முசுமுசுக்கை இலை பொடி – ரத்தம் சுத்தமாகும், மூச்சு திணறல், சளி இருமல் சரி செய்யும், நல்லெண்ணை சேர்த்து காய்ச்சி தேய்க்க இளநரை போக்கும்
- மாசிக்காய் பொடி– வயிற்று போக்கு நிற்கும், நீரில் காய்ச்சி கொப்பளிக்க பல் நோய் குணமாகும். வாய் புண் வயிற்று புண் குணமாகும்.
- மருதம் பட்டை பொடி – இருதய நோய்க்கு சிறந்த மருந்து.
- பூனைக்காலி விதை பொடி – நரம்பு தளர்ச்சி, நினைவாற்றல் பெருகும், மன உறுதி தரும்.
- அவுரி (நீலி) பொடி – வெள்ளாட்டு பாலில் கலந்து சாப்பிட மஞ்சள் காமாலை நீங்கும், சிறந்த மலமிளக்கி, முடியை கருமையாக்க பயன்படும்.
- பிரண்டை பொடி – எலும்பு உறுதி பெறும், வாயு சம்பந்தபட்ட நோய்கள் தீறும், உடல் வலிமையும் நினைவாற்றலும் பெறுகும்.
- அம்மான் பச்சரிசி பொடி – தாய்ப்பால் பெருகும்.
- கல்யாண முருங்கை இலை பொடி – மாதவிடாய் தொந்தரவுகள், தாய்ப்பால் பெருக நல்லது.
- மஞ்சள் கரிசலாங்கன்னி பொடி – இரத்தக் குறைவு, ஈரல் நோய்களுக்கு நல்லது.
- நிலவெம்பு பொடி – சர்வசுரம், விஷக்கடி.
- தாமரை இதழ் பொடி – இதயபடபடப்பு, இரத்த கொதிப்புக்கு நல்லது.
- தாளிசபத்திரி பொடி – இளைப்பு, இருமல், அஜீரணக் கோளாறுகளுக்கு நல்லது.
- தான்றிக்காய் பொடி – பித்த நோய் நீங்கும், கண்பார்வை தெளிவு பெறும்.
- வல்லாரை இலை பொடி – ஞாபக சக்திக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் நல்லது.
- ஆடுதின்னாபாளை பொடி – தலை பொடுகு மற்றும் பூச்சி வெட்டுக்களை போக்கும்.
- ஆலம்பட்டை பொடி – கற்றாழை நாற்றம், சர்க்கரை வியாதி, உடல் உஷ்ணம் குறையும்.
- மாதுளை ஓடு பொடி – இரத்தக் கடுப்பு, வயிற்றுக் கடுப்புக்கு நல்லது.
- வாதமடக்கி இலை பொடி – வாதநோய்கள் நீங்கும்.
- வேலிபருத்தி பொடி – வாய்வு, வலிகுத்தல், குடச்சல் நோய்களுக்கு நல்லது.
- நிலப்பனைக்கிழங்கு பொடி – தாது நட்டம், உடல் பலவீனம்.
- பூமிசக்கரைகிழங்கு பொடி – தாது நட்டம், உடல்வலிமை.
- சிறுபீளை பொடி – நீர் எரிச்சல், கல்லடைப்பு.
- ஓமம் பொடி – பசித்தூண்டி, வாயு அகற்றி.
- தண்ணீர்விட்டான் கிழங்கு பொடி – நீரழிவு, வெள்ளை, வெட்டை சூடுக்கு நல்லது.
- பிரசவ பொடி – தாய்மார்களுக்கு பால் சுரக்க, வயிறு உப்பிசம்.
- முக்கிரட்டை பொடி – சளி, தலைபாரம் நீங்க.
- சதகுப்பை பொடி – பசியின்மை, சூதக வாய்வு.
- விஷ்ணு கிராந்தி பொடி – விடாக்காய்ச்சல் உடல்வலி, இருமல்.
- முருங்கை இலை பொடி – உட்சூடு, தலைநோய், மந்தம் கண் நோய்.
வெளிப்பிரயோகப் பொடிகள்
- கஸ்தூரி மஞ்சள் பொடி – தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.
- மூலிகை ஸ்நானப் பொடி – சர்மநோய்கள், பேன்கொல்லி
- முல்தானிமட்டி பொடி – முகம் பொலிவுபடும், வெளி உபயோகத்திற்கு மட்டும்.
- மருதாணி பொடி – கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும், தலை வலிக்கு பத்திடலாம்.
- எலுமிச்சை தோல் பொடி – தலைக்கு தேய்த்து குளிக்க நல்லது.
- மூலிகை பேஷியல் பொடி – முகப்பரு, தேமல், கருவளையம்.
- பூலாங்கிழங்கு பொடி – குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
- சிறுபயறு பொடி – தேய்த்து குளிக்க சர்ம வறட்சி நீங்கும்.
- உசிலை பொடி – உடல் குளிர்ச்சி பெற குளியல் பொடியாக பயன்படுத்தவும்.
- ஆரஞ்சு தோல் பொடி – முக அழகுக்கு தேய்த்து குளிக்க
- செம்பருத்தி இலை பொடி – கேச வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.